உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

ஹைறாத் வித்தியாலயத்திற்கு ‘Hizbullah Foundation’ புல் வெட்டும் இயந்திரம் அன்பளிப்பு.!!!

மட்/மம/ஹைறாத் வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பாடசாலையின் சுற்றுப்புறச் சுத்தம் மற்றும் அழகுபடுத்தல் பணிகளை மேலும் திறம்பட முன்னெடுக்க உதவும் வகையில், ‘ஹிஸ்புல்லாஹ் பௌண்டேஸன்’ அமைப்பினால் புல் வெட்டும் இயந்திரம் ஒன்று இன்று (01) ஞாயிற்றுக்கிழமை பாடசாலை நிருவாகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பாடசாலையின் வளாகத்தை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிப்பதற்கும், மாணவர்களுக்கான ஆரோக்கியமான கல்விச் சூழலை மேலும் மேம்படுத்துவதற்குமான நோக்கத்துடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், பாடசாலை உட்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி நடவடிக்கைகள் மற்றும் இதர அவசியமான தேவைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஹைறாத் வித்தியாலயத்தின் அதிபர் என்.எம்.எம்.ஏ. ரஹீம், பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ‘ஹிஸ்புல்லாஹ் பௌண்டேஸன்’ அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810834

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time