‘ஹிஸ்புல்லாஹ் பௌண்டேஷன்’ அமைப்பினால் – காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்திற்கு அன்பளிப்பு.!!!
காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் நிருவாகத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இன்று ஞாயிற்றுக்கிழமை (18) ‘ஹிஸ்புல்லாஹ் பௌண்டேஷன்’ அமைப்பினால் ஒரு தொகுதிப் பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகம், நாடு முழுவதும் உள்ள கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்குப் புகலிடம் அளித்து வருவதுடன், அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.
இந் நிகழ்வில் காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் ஸ்தாபகத் தலைவர் ஆசிரியை சல்மா அமீர் ஹம்ஸா, ஓய்வுபெற்ற அதிபர் ஜெஸீமா முஸம்மில், ஹிஸ்புல்லாஹ் பௌண்டேஷன் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காப்பகத்தில் பராமரிக்கப்படும் பெண்களின் நலன் கருதி, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்த மனிதாபிமான உதவி வழங்கப்பட்டது.
— ஊடகப்பிரிவு





