உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கோர விபத்து; காத்தான்குடியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் உயிரிழப்பு.!!!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கேகாலை 85ம் மைல்கள் அருகே இன்று இடம்பெற்ற கோர விபத்தில், காத்தான்குடியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பொலீசார் தெரிவித்ததாவது, கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒரு லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி மீது மோதியதுடன், அதற்கு முன்னால் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

மேலும், குறித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, அதற்கு முன்னால் சென்ற தனியார் பேருந்துடன் மோதியதன் காரணமாக விபத்து மேலும் தீவிரமடைந்ததாகவும் பொலீசார் கூறினர்.

இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இருவர், இரு பேருந்துகளிலும் பயணித்த ஐந்து பயணிகள் என மொத்தம் ஏழு பேர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மேலும் இரண்டு காயமடைந்த பயணிகள் மாவனல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 805917

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time