உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

மட்டக்களப்பில் வீடு வீடாக டெங்கு ஒழிப்பு சோதனை; பல இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு.!!!

(ஜே.கே)

சுகாதார அமைச்சு இன்று முதல் பிரகடனப்படுத்தியுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டிய மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாவட்டத்தின் பிரதான வைபவம் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு உயர் அதிகாரிகளின் பங்கு பங்கு பற்றுதலுடன் மட்டக்களப்பு நாவற்குடா பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் இடம்பெற்றது

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரன் வழிகாட்டலில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ உதயகுமாரின் தலைமையில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சமூக வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி அனோஜா தீரசிங்க இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பொலிசார்,கடற்படையினர், இலங்கை செஞ்சிலுவை சங்கம் ,சுகாதார திணைக்களம் உட்பட பல திணைக்களங்கள் இணைந்து பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்

விடு வீடாக நடத்திய பரிசோதனைகளின் போது பல வீடுகளில் டெங்கு கொடுமைகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பலர் மீது சட்ட நடவடிக்கை மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டன
பல இடங்களில் கிணறுகளில் மீன் குஞ்சுகளும் இடப்பட்ட.ன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215571

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time