உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மனைவியின் கழுத்தறுத்து கொலை செய்த கணவன்: பொலிஸில் சரண்.!!!

காலி – நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஆரம்பக் கட்ட விசாரணைகளின் படி, குடும்பப் பிரச்சினையைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், உயிரிழந்த மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை, அவருடன் தகாத தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டு முற்றத்தில் வைத்து சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 32 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேக நபர் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அவர் இன்று உடுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700918

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time