உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

சமூக செயற்பாட்டாளர் மர்ஹூம் இர்பானின் நினைவாக: கத்தமுல் குர்ஆன் மற்றும் பிரார்த்தனை நிகழ்வு.!!!

–எம்.ரி.எம்.யூனுஸ்–

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் பணியாற்றிய மர்ஹூம் முகம்மட் இர்பானுக்காக கத்தமுல் குர்ஆன் ஓதல் மற்றும் பிரார்த்தனை நிகழ்வு நேற்று (04) செவ்வாய்க்கிழமை புதிய காத்தான்குடி 167C பலநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வை புதிய காத்தான்குடி 167C கிராம அபிவிருத்தி சங்கம், சமுர்த்தி சமூக அடிப்படை அமைப்புகள் மற்றும் பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

167C கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஏ.எல்.ஏ. ரஹீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மர்ஹூம் முகம்மட் இர்பான் அவர்களின் சமூகப் பணிகள், மனிதநேயம் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சியாம், கிராம உத்தியோகத்தர் நிரோஷா கியாஸ், புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் மெளலவி இல்ஹாம் பலாஹி, 167C சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நூர்தீன் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் ஆகியோர் இரங்கல் உரைகளை நிகழ்த்தினர். மெளலவி ஷாஜஹான் பலாஹி துஆ பிரார்த்தனையை நடத்தினார்.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் சில்மியா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஹன்சுல் சிஹானா, நிர்வாக உத்தியோகத்தர் ஜரூப் பங்கேற்றனர்.

மேலும், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மர்ஹூம் இர்பான் அவர்களின் குடும்பத்தினர், 167C கிராம அபிவிருத்தி சங்கம், சமுர்த்தி சமூக அடிப்படை அமைப்புகள், பெண்கள் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மர்ஹூம் முகம்மட் இர்பான் அவர்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067003

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time