உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

10,093 இராணுவ வீரர்களுக்கு; பதவி உயர்வு.!!!

16 வது போர் வீரர்கள் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில், 10,093 ஆணையிடப்படாத அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ வின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்தது.

இப் பதவி உயர்வுகளின்படி, வாரண்ட் அதிகாரி II தரத்தில் உள்ள 225 மூத்த ஆணையிடப்படாத அதிகாரிகள் வாரண்ட் அதிகாரி I தரத்திற்கும், ஸ்டாஃப் சார்ஜென்ட் தரத்தில் உள்ள 816 மூத்த ஆணையிடப்படாத அதிகாரிகள் வாரண்ட் அதிகாரி II தரத்திற்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மேலும், சார்ஜென்ட் தரத்தில் உள்ள 1191 மூத்த ஆணையிடப்படாத அதிகாரிகள் ஸ்டாஃப் சார்ஜென்ட் தரத்திற்கும், கார்ப்ரல் தரத்தில் உள்ள 2302 ஆணையிடப்படாத அதிகாரிகள் சார்ஜென்ட் தரத்திற்கும்,

லான்ஸ் கார்ப்ரல் தரத்தில்உள்ள 3468 ஆணையிடப்படாத அதிகாரிகள் கார்ப்ரல் தரத்திற்கும், 2091 சாதாரண வீரர்கள் லான்ஸ் கார்ப்ரல் தரத்திற்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720162

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time