உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 57வது பட்டமளிப்பு விழா; 40 பேர் பட்டம் பெற்றனர்.!!!

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 57வது பட்டமளிப்பு விழா இன்று (06) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பரீட் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். அலியார் (பலாஹி, றியாழி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேருவளை ஜாமிஆ நளீமியாவின் முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் (நளீமி) பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எஸ்.எம். பாறூக் (பலாஹி, அஸ்ஹரி) முன்னிலை அதிதியாகவும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது, 29 மெளலவிகளும் 11 ஹாபிழ்களும் அதிதிகளிடமிருந்து பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். அத்துடன், மூத்த உலமாக்கள், விரிவுரையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

1955ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் இதுவரை 500 மெளலவிகளும் 438 ஹாபிழ்களும் பட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215583

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time