உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

10 நிமிடம் மழை பெய்தால் போதும்: வெள்ள நீர் தேங்கும் சாய்ந்தமருது பெண்கள் சந்தை.!!!

10 நிமிடம் மழை பெய்தால் போதும் வெள்ள நீர் தேங்கும் பிரதேசமாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பெண்கள் சந்தை(பொம்பிளை சந்தை -உள்ளுரில் அழைக்கப்படும் பெயர்) ஆகும்.

இன்று மட்டுமல்ல பருவ காலத்தில் கூட அடிக்கடி வெள்ள நீரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்ற சந்தைப்பகுதியாகவும் இச்சந்தையை சூழ உள்ள மாநகர சபைக்கு உட்பட்ட உள்வீதிகளும் வெள்ள நீரில் மூழ்குவதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு ஏற்படும் வெள்ள நீர் சந்தைக்கு வரும் மக்களை சிரமங்களுக்குள் உள்ளாக்குவதுடன் விபத்துக்களை ஏற்படுத்தவும் காரணமாக அமைகின்றன.

அத்துடன் இச்சந்தையை சுற்றி உள்வீதிகளில் காணப்படும் வடிகான்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாமையினால் நீர் தேங்கி வெள்ள நிலைமை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.

இது தவிர குறித்த சந்தை மேற் கூரையும் எவ்வித கவனிப்பாரற்று காணப்படுவதனால் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

அத்துடன் சந்தைப்பகுதிக்கு தொடர்ச்சியாக வெள்ளம் தேங்கி நிற்பதனால் துர்நாற்றமும் வீசுவதுடன் சுகாதார அச்சுறுத்தலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700835

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time