சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் புதிய அதிபராக – கே.எல். அப்துல் ஜௌபர் கடமையேற்பு.!!!
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது கமு/கமு/ அல்ஹிலால் வித்தியாலயத்தின் புதிய அதிபராக கே.எல். அப்துல் ஜௌபர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அங்கு அதிபராக இருந்த எம்.எச். நுஸ்ரத் பேகம் (2025.01.01) சாய்ந்தமருது கமு/ கமு/ அல்-கமரூன் வித்தியாலயத்திற்கு பொறுப்பு அதிபராக நியமிக்கப்பட்டதை அடுத்து அங்கு பிரதி அதிபராகக் கடமையாற்றிய இவர், அதிபர் பதவியை தற்காலிகமாக ஏற்றார்.
சென்றல் கேம்ப் எனும் இடத்தைப் பிறப்பிடமாகவும், சாய்ந்தமருது -10, ஆஸ்பத்திரி வீதியில் வசிப்பவருமான கலந்தர் லெப்பை அப்துல் ஜௌபர் 1975.12.15 இல் சென்றல் கேம்ப் இல் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை கமு/சது/சென்றல் கேம்ப் ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை கமு/ சது / அஸ்-ஸிறாஜ் மகாவித்தியாலயம் மற்றும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் வர்த்தகப் பிரிவிலும் கல்வி கற்றார்.
2003.06.19 ஆம் திகதி முதல் சென்றல் கேம்ப் ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியராக கடமை ஏற்றுக் கொண்ட இவர், 2017.05.14 வரை அங்கு கடமையாற்றினார்.
2017.05.15ஆம் திகதி முதல் சாய்ந்தமருது கமு/கமு/ அல்ஹிலால் வித்தியாலயத்திற்கு இடமாற்றப்பட்டார்.
அங்கு இரண்டாம் மொழி சிங்களப் பாட ஆசிரியராக கடமையாற்றிய போது, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 2023 இல் உதவி அதிபராக நியமனம் பெற்று அல்ஹிலால் பாடசாலையில் கடமையாற்றினார். 2023 இல் குரு பிரதீபா விருதையும் பெற்றுள்ளார்.
அல்ஹிலால் பாடசாலையில் அதிபராக இருந்த எம்.எச். நுஸ்ரத் பேகம். அவர்கள் கமு / கமு/ அல்-கமரூன் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றதைத் தொடர்ந்து சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையின் தற்காலிக அதிபராக கே.எல். அப்துல் ஜௌபர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
கலைப்பட்டதாரியான இவர், NIE இல் PGDEM கற்கை நெறியினைத் தொடர்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அல்ஹிலால் பாடசாலையின் புதிய அதிபருக்கு முன்னாள் அதிபர் ‘அதிபர் திலகம்’ யூ.எல். நஸார் நேரடியாக விஜயம் செய்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள அதேவேளை, பிரதேசத்தின் கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக அமைப்புக்கள், பெற்றோர், மாணவர்கள் உட்பட பல தரப்பினரும் வாழ்த்துகளுடன் கூடிய பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.




