உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

காணாமல் போனவர் சடலமாக மீட்பு; சந்தேக நபர் கைது.!!!

தெமடகஹகந்த, நவ்தகல பகுதியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன ஒருவர் நேற்று (6) சடலமாக மீட்கப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

42 வயதுடைய குறித்த நபரைக் காணவில்லை என அவரது மனைவி கடந்த மாதம் 14 ஆம் திகதி எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன நபரின் சடலம் தெமடகஹகந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசப்பட்டு மண்ணால் மூடப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட காணியின் உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, ​​காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டுள்ள மின்சார கம்பியில் சிக்கி அந்த நபர் இறந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அவர் மற்றொரு நபருடன் சேர்ந்து, கிணற்றில் சடலத்தை வீசி மண்ணால் மூடியிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளரும் அவருக்கு உதவிய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1372629

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time