உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காத்தான்குடி சம்மேளனத்தினால் ஸ்ரீ சத்யசாய் பாபா வைத்தியசாலைக்கு நிதி அன்பளிப்பு; சேவைக்கு பாராட்டு.!!!

குருக்கள்மடம் பிரதேசத்தில் இன, மத வேறுபாடுகளை கடந்து மனிதநேய சேவைகளை முன்னெடுத்து வரும் ஸ்ரீ சத்யசாய் பாபா நோய் நிவாரண வைத்தியசாலைக்கு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் நிதி அன்பளிப்பு வழங்கி அதன் சேவைகளைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி இன்று (12) கௌரவித்துள்ளது.

சம்மேளனத்தின் பதில் தலைவர் எம்.ஏ.சி. அப்துல் சத்தார் தலைமையிலும், செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். றமீஸ் ஜமாலி நெறிப்படுத்தலிலும் நடைபெற்ற நிகழ்வில் இந்த கௌரவிப்பு இடம்பெற்றது.

எமது பிரதேச மக்களுக்கு இன, மத பேதமின்றி சேவையாற்றி வரும் இவ்வைத்தியசாலை, “ஒரு உலகம் – ஒரே குடும்பம்” என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருவது பாராட்டத்தக்க விடயமாகும் என நிகழ்வில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

காத்தான்குடி மக்களின் பங்களிப்பு இவ்வைத்தியசாலையின் தொடர்ச்சியான சேவைகளுக்கு இன்றியமையாததாக இருப்பதாகவும் வலியுறுத்தப்பட்டது.

வைத்தியசாலையின் முகாமையாளர் திரு டேவிட் மற்றும் சிரேஷ்ட கணக்காளர், மருத்துவப் பொறியியலாளர் ஆகியோர் வைத்தியசாலை நிர்வாகம் சார்பில் கௌரவத்தைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய முகாமையாளர் திரு டேவிட், வைத்தியசாலையின் சேவைகளின் பரந்தளவு மற்றும் அதன் சமூகப் பங்களிப்புகள் குறித்து விளக்கமளித்தார். வைத்தியசாலையின் மாதாந்திர செலவு சுமார் 12 மில்லியன் ரூபாவாக இருப்பதுடன், சுவாச நோய்களால் பாதிக்கப்படும் சிறுவர்களை மாதம் விட்டு மாதம் இந்தியாவிற்கு அனுப்பி சிகிச்சை வழங்கும் திட்டத்திற்கான முழுச் செலவையும் வைத்தியசாலை நிர்வாகமே பொறுப்பேற்று வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான மனிதநேய மற்றும் சமூக நலப் பணிகளை சமூகமும் பொதுமக்களும் ஊக்குவித்து முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டியது அவசியமானது எனவும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி மக்களின் நலனுக்காக இன, மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற நிலையில், இந்த நிதி அன்பளிப்பும் அதில் குறிப்பிடத்தக்க ஒரு சமூகப் பணியாக அமைந்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1065405

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time