காத்தான்குடி பொலிஸாரின் சுற்றி வளைப்பில், சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் கைது.!!!
(ஜே.கே)
சுமார் 41 லட்சம் ரூபாய் பெறுமதியான 25420 சட்டவிரோதமான சிகரெட்டுகளுடன் இரு வர்த்தகர்களை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாயகா தெரிவித்தார்
இன்று (16) அதிகாலை கம்பளையிலிருந்து கல்முனை நோக்கி வந்த தனியார் பஸ் வண்டியில் வைத்து மேற்படி சிகரெட் களுடன் இரு வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வர்த்தகர்களிடமிருந்து 25,420 பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி சுமார் 41 லட்சம் ரூபாய் என பொலிசார் தெரிவித்தனர்
பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து இன்று அதிகாலை பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த சிகரெட் களுடன் இரண்டு வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள வர்த்தகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



