உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

காத்தான்குடி பொலிஸாரால் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 42 பேர் கைது.!!!

(ஜே.கே)

குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரத்நாயக்காவின் பணிப்புரையின் பேரில் காத்தான்குடி குற்றத்தடுப்பு பொலிசார் மற்றும் போதை ஒழிப்பு பிரிவினர் குறித்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்

இதன் போது ஐஸ் போதைப் பொருட்களுடன் 15 பேரும்,கேரள கஞ்சாவை வைத்திருந்த ஒருவரும், சட்டவிரோத சிகரட்களுடன் இரு நபர்களும் கசிப்பு போதை பொருள் விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்ட 24 நபர்களுமாக 42 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ், கேரள கஞ்சா, கசிப்பு போதை பொருள், சிகரட்கள், கசிப்பு தயாரிப்பு உபகரணங்கள், எரிவாயு சிலிண்டர் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட உள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700743

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time