உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற மூவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது.!!!

சட்டவிரோதமான முறையில் போலியான அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி மாடுகளை ஏற்றிச் சென்ற மூவரை இன்று (03) காலை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

ஏறாவூரிலிருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு போலியான அனுமதி பத்திரத்தைப் பயன்படுத்தி 9 மாடுகளை சிறிய வாகனம் ஒன்றில் அடைத்து வைத்த நிலையில் ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகனத்திலிருந்த 9 மாடுகளின் உடல் பலவீனமாக இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

சில மாடுகளில் காயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மிருகவதை சட்டத்தின் கீழ் குறித்த சந்தேகநபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700698

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time