உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

காத்தான்குடி சன்ரைஸ் விளையாட்டுக் கழகத்திற்கு; விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.!!!

கடந்த 2024 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் அரசியல் சமூக செயற்பாட்டாளர் ஆதம் எஹ்யா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் வடமேல் மாகாண ஆளுநர் அல்ஹாபீஸ் நசீர் அஹமத் அவர்களினால் விளையாட்டுத்துறை முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் தேக ஆரோக்கியம் தலைமைத்துவ பண்பு விருத்தி கருதி காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள பல விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது

இதில் சன்ரைஸ் விளையாட்டு கழகத்துக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 09.03.2025 திகதி இப்தார் நிகழ்வுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட ஆதம் எஹ்யா அவர்களினால் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான கால்பந்தாட்ட சீருடை மற்றும் காலணிகள் கையளிக்கப்பட்டன.

காத்தான்குடி சன்ரைஸ் விளையாட்டு கழகத்தினரால் முன்னாள் ஆளுநர் அல்ஹாபீஸ் நசீர் அஹமத் அவர்களுக்கும் உபகரணங்களை பெற்றுத் தந்து உதவிய ஆதம் எஹ்யா அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700673

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time