உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

காத்தான்குடியில் 20 உணவகங்கள் திடீர் சுற்றிவளைப்பு; 12 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட காத்தான்குடி மற்றும் புதிய காத்தான்குடி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை (16) சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது மனித நுகர்விற்கு பொருத்தமில்லாத உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யும் 20 உணவகங்கள், வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், திடீர் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் (fast food) உணவகங்கள் சுகாதார அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர் முரளீஸ்வரனின் பணிப்புரையின் பேரில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நஸீர்தீனின் வழிகாட்டலில் குறித்த வர்த்தக நிலையங்கள் திடீரென சுற்றி வளைக்கப்பட்டன. மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எம்.ஏ.எம்.பஸீர் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பை மேற்கொண்டு பரிசோதனை நடாத்தினர்.

இதன் போது நுகர்வுக்கு பொருத்தமில்லாத, காலாவதியான, லேபல் ஒட்டப்படாத பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், மருத்துவச் சான்றிதழ் இன்றி கடமை புரிந்த அதிகளவிலான ஊழியர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இதன்போது 12 வர்த்தகர்கள் மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதர் பஸீர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் வாராவாரம் இவ்வாறான சுற்றி வளைப்பு தேடுதல்கள் தொடரும் என சுகாதார பகுதியினர் மேலும் தெரிவித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810219

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time