உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

கொடுத்த வாக்கை நிறைவேற்றினார்; முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்.!!!

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் தனது முதல் மாத சம்பளத்தை பொது தேவைகளுக்காக பயன்படுத்துமாறு கல்குடா உலமா சபையிடம் வியாழக்கிழமை (13) இரவு வழங்கி வைத்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் 2018ல் தனது உள்ளுராட்சி மன்ற அரசியல் பிரவேசத்தின் போது மக்களிடம் ஒரு உறுதி மொழியினை வழங்கினார் தான் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டால் அந்த பதவியால் கிடைக்கும் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் வாகன சலுகை எதையும் தனக்கு என உபயோகிக்காது அவற்றை முழுமையாக மக்களின் தேவைக்காக வழங்கி விடுவேன் என்று.

அதன் பிரகாரம் ஏறாவூர் நகர சபை உறுப்பினராகி பின்னர் தவிசாளர் ஆகவும் பதவி வகித்தார் ஆனால் அவர் அப்பதவிக்கான கொடுப்பனவு எதுவும் தனக்காக எடுக்காமல் தேவை உடைய மக்களுக்கும் நோயாளிகளுக்கும் என்று வழங்கியதோடு பாடசாலை, பள்ளிவாசல் என பொது தேவைகளுக்கு வழங்கி வந்தார்.

அந்த வகையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டு உள்ள அவர் தனது முதலாவது மாத சம்பளம் 54,285 ரூபாய், தொலைபேசி கட்டணம் 50,000 ரூபாய், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கட்டணம்120,000 என மொத்த கொடுப்பனவாக இரண்டு இலட்சத்து இருபத்து ஐயாயிரம் ரூபாய் (225,000) பணத்தினை இன்று கல்குடா உலமா சபையிடம் வழங்கி வைத்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்குடா தொகுதி ஆதரவாளர்களை நன்றியுடன் கௌரவிக்கும் முகமாக அகில இலங்கை ஜமியதுல் உலமா சபையின் கல்குடா கிளை நிருவாகத்திடம் அப்பகுதி பொது தேவைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் இப் பணத்தினை கையளித்தார்.

உலமா சபை கல்குடா கிளை அலுவலகத்தில் வைத்து உலமா சபை தலைவர் அஷ்ஷெயஷக் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையிலான குழுவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் குறித்த நிதியை கையளிப்பு செய்தார் .

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜி.அஸீஸுல் றஹீம், அஷ்ஷெய்க் எம்.ஐ. ஹாமித் லெப்பை, எம்.ரீ.எம். அன்வர் உட்பட கட்சியின் கல்குடா தொகுதி முக்கியஸ்தர்களுடன் ஏறாவூர் பிரதேச முக்கியஸ்தர்களான முன்னாள் நகர சபை உறுப்பினர்கள் M அஜ்வத் , கபூர்தீன் ஹாஜி , முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் தபாலதிபர் நசீர் உட்பட பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722359

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time