உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி: முதலாம் கட்ட அகழ்வு பணி மார்ச் 30ஆம் திகதி ஆரம்பம்.!!!

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் உள்ளதாகக் கூறப்படும் மனிதப் புதைகுழி தொடர்பான முதலாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை நிறைவு செய்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் குழுவொன்று ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அங்கு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சம்பவம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்ட நீதிவான், குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான முதலாம் கட்ட அகழ்வு பணிகளை மார்ச் 30ஆம் திகதி ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக வழக்கில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்த அகழ்வு பணிகள் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810918

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time