உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி; மண் படிம மாதிரி பரிசோதனை.!!!

குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாகக் கருதப்படும் இடத்தில், அகழ்வுப் பணிகளின் ஓர் அங்கமாக மண் படிம மாதிரி பரிசோதனைகள் இன்று செவ்வாய்க்கிழமை (06) முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு கல்முனை ஊடாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம் மக்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடம் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குறித்த வழக்கின் தொடர்ச்சியாக களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி. பிரதீபன் முன்னிலையில், சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாகக் கருதப்படும் பகுதியில் அகழ்வுப் பணியின் ஒரு கட்டமாக மண் படிம மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின்போது முறைப்பாட்டாளரான ரவூப் அப்துல் மஜீத், சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.

குறித்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மற்றும் அகழ்வுப் பணிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரவுள்ளன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214773

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time