உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

கனமழையுடன் மின்னல் தாக்கம்; 50 வயது நபர் பலி.!!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்ரன் தோட்டப் பகுதியில் இன்று (03) பிற்பகல் மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பாமஸ்ரன் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பிரமணியம் தேவகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் தலவாக்கலை பாமஸ்ரன் தோட்டப் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதன்போது நான்கு பேர் வீடொன்றினுள் இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியுள்ளது.

இதில் சுப்பிரமணியம் தேவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214774

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time