உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

காத்தான்குடியில் உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்: “புத்துயிர்க்கும் புதுநகரம்” எனும் தொனிப்பொருளில் பல்வேறு மக்கள் சேவைகள் முன்னெடுப்பு.!!!

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் “புத்துயிர்க்கும் புதுநகரம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரம் இன்று (14) திங்கட்கிழமை காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு காத்தான்குடி முஹீதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயலில் ஆரம்ப நிகழ்வும், பொதுமக்களுக்கான நடமாடும் சேவையும் நடைபெற்றன.

நடமாடும் சேவையின் போது பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவை தொடர்பில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் மற்றும் அதிகாரிகளினால் நேரடியாக கவனம் செலுத்தப்பட்டு, சாத்தியமான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளும் வழங்கப்பட்டன.

இதன்போது தாய்சேய் நலன் மருத்துவ முகாம், இலவச பல் வைத்திய முகாம், கால்நடை வைத்திய முகாம், ஆயுர்வேத வைத்திய முகாம், கட்டட விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுதல், ஆதனவரி செலுத்துதல் மற்றும் பெயர் மாற்றம், வியாபார வரி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.

அத்துடன், மின்விளக்கு கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வழங்குதல், நீர் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் சேவைகள், வீதிக் குழிதைகளை சீர்செய்தல், வீதி துப்புரவு உள்ளிட்ட பல்வேறு பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஊடாகவும் பொதுமக்களுக்கான பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மெளஜூத், காத்தான்குடி நகர சபை பிரதி தவிசாளர் ஜெசீம், நகர சபை செயலாளர் திருமதி றினோஸா முப்லி, நகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215600

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time