வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி; டிப்பருடன் மோதி சாரதி படுகாயம்.!!!
ஹட்டன் – புலியாவத்தை பிரதான வீதியில் டிப்பர் வாகனமும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து இன்று (05) காலை சுமார் 8.00 மணியளவில் டிக்கோயா – தரவளை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும், பால் ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதியுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, லொறி அதிக வேகத்தில் பயணித்த நிலையில், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளதுடன், லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




