உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில்; சுகாதார அமைச்சுக்கு சொந்தமான அம்புலன்ஸ் வண்டி பாரிய விபத்து.!!!

● சாரதி நடத்தினருக்கு படுகாயம் மின்கம்பங்கள் துண்டு துண்டாக உடைவு மின்சாரம் துண்டிப்பு.

(ஜே.கே)

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய அளவிலான விபத்தில் மின்கம்பம் ஒன்றுடன் அம்புலன்ஸ் வண்டி மோதியதில் மின்கம்பங்கள் துண்டு துண்டாக உடைந்து நொறுங்கியதுடன் அம்புலன்ஸ் வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது. சாரதி மற்றும் நடத்துனர் படுகாயம் அடைந்தத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிந்நவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த அம்புலன்ஸ் வண்டி பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி உள்ளதுடன் அருகில் இருந்த பனைமரத்திலும் மோதியுள்ளது.இதனால் மின்சாரம் குறித்த பிரதேசத்தில் துண்டிக்கப்பட்டுள்ளது

சுகாதார அமைச்சின் சுகாதாரத் திணைக்களத்துக்கு கீழுள்ள கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு சொந்தமான நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்குரிய அம்புலன்ஸ் வண்டி இதுவாகும்.

சுமார் ஒரு கோடி 75 லட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த அம்புலன்ஸ் வண்டி விபத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 805916

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time