உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

காத்தான்குடி பிரதான வீதியில் பாரிய விபத்து; மூவர் படுகாயம்.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில், காத்தான்குடி பிரதேசத்தில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில், மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த லொரியொன்று காத்தான்குடி பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த அதே நேரம், கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று குறித்த லொரியின் பின்னால் மோதியதன் காரணமாக பாரிய விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

குறித்து விபத்தை தொடர்ந்து பிரதான வீதியில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் பஸ் மீது மோதியுள்ளது இதனால் பஸ் நடத்துனர் படுகாயமடைந்தார். அதே நேரம் பஸ்ஸின் சாரதி முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோரும் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸின் அதிக வேகமே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. சொகுசு பஸ் ஆட்டோ என்பன பெரிதும் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933498

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time