தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து; 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 10க்கும் மேற்பட்டோர் காயம்.!!!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை பகுதிகளுக்கு இடையில் இன்று (21) வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து உள்ளிட்ட பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் ஆறு மோட்டார் வாகனங்களும் இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



