உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

டெங்கு பரவலை கட்டுப்படுத்த கல்முனையில் அதிரடி நடவடிக்கை; அரச நிறுவனங்கள் ஒன்றிணைவு.!!!

-அஸ்லம் எஸ்.மௌலானா-

கல்முனை மாநகர பிரதேசங்களில் டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்ற சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதற்கும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்கும் அரச நிறுவனங்கள் யாவும் கூட்டுப் பொறுப்புடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை கூட்ட மண்டபத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னி அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி எப்.எஸ்.சராப்தீன், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பி.கேதுஜன், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எம்.முஜீப், கல்முனை தெற்கு மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின் உட்பட கல்முனை மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, கரையோரம் பேணல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், சுற்றாடல் அதிகார சபை, கடற்றொழில் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பொலிஸ் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கல்முனை மாநகர பிரதேசங்களில் டெங்கு நுளம்புகள் பரவலுக்கு ஏதுவாக அமைந்துள்ள முக்கிய காரணிகள் குறித்தும் சுகாதார சீர்கேடுகள் தொடர்பிலும் இவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய முறையான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பிரதேசங்களில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருகின்ற சூழ்நிலையில்
இத்தீர்மானங்களை இறுக்கமாக நடைமுறைப்படுத்துகின்ற விடயத்தில், சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளிலும் இப்பகுதியிலுள்ள அரச நிறுவனங்கள் யாவும் கூட்டாக இணைந்து செயற்படுவதென இதன்போது அதிகாரிகளிடையே இணக்கம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214779

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time