உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது – ரூ.8 கோடிக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ சிக்கியது.!!!

ரூ.8 கோடிக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ரத்மலானை, ஜயமாவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஓமானிலிருந்து போதைப்பொருளுடன் கத்தார் நாட்டின் தோஹா நகருக்குச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர், தோஹாவிலிருந்து கத்தார் எயார்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, அவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளின் பெறுமதி ரூ.8 கோடிக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214782

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time