உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

டுபாயிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.3.65 கோடி பெறுமதியான தங்க நகைகளுடன் ஒருவர் கைது.!!!

டுபாயிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் ரூ.3 கோடியே 65 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகளுடன் 51 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – பல்லேகல பகுதியைச் சேர்ந்த குறித்த வர்த்தகர், நேற்று (03) டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

இதன்போது, தனது உடலில் நான்கு பொதிகளாக மறைத்து சுமார் 996 கிராம் எடையுடைய தங்க நகைகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இன்று (04) அதிகாலை வரை இடம்பெற்ற சுங்க விசாரணைகளின் பின்னர், கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை அரசுடைமையாக்கவும், சந்தேகநபருக்கு ரூ.37 இலட்சம் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214782

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time