உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260921-WA0076
“மாற்றம்” என்ற மக்கள் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்; சாதனைகள், சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?!!!
IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!

Share :

உள்ளூராட்சி வார நிகழ்வுகளுக்கு ஊடக ஆதரவு; ஸ்பொட்நியூஸ் செய்தி ஆசிரியர் எம்.ரி.எம். யூனுஸ் கௌரவிப்பு.!!!

“வளமான நாடு – அழகான வாழ்வு” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட “புனருதயே புரவர – புத்துயிர்க்கும் புதுநகரம்” உள்ளூராட்சி வாரம் 2026 நிகழ்வுகளின் நிறைவு நிகழ்வு நேற்று (24) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி நகரசபை செயலாளர் றினோஸா முப்லிஹ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். நகரசபை கணக்காளர் எம்.பீ.எம். இத்ரீஸ் கௌரவ அதிதியாகவும், நகரசபை உறுப்பினர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், உள்ளூராட்சி வார நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சமூக நிறுவனங்கள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஊடகப் பணிகளை முன்னெடுத்த ஊடகவியலாளர்களும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது Spot News Media Network (PVT) Ltd நிறுவனத்தின் பணிப்பாளரும் www.spotnews.lk இணையத்தளத்தின் செய்தி ஆசிரியருமான கவிஞர் எம்.ரி.எம். யூனுஸ்  உள்ளூராட்சி வாரம் 2026 நிகழ்வுகளின் தகவல் பரப்புரை மற்றும் ஊடகச் செயற்பாடுகளுக்கு வழங்கிய மதிப்புமிக்க ஊடக ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

“புனருதயே புரவர – புத்துயிர்க்கும் புதுநகரம்” உள்ளூராட்சி வாரம் 2026 நிகழ்வுகளை சிறப்பாக முன்னெடுத்த காத்தான்குடி நகரசபையின் தொடர் செயற்பாடுகளின் நிறைவு நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1185252

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time