உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

காணாமல் போன எருமை மாடுகள் மருதமுனையில் மீட்பு; இரு சந்தேகநபர்கள் கைது.!!!

-தில்சாத் பர்வீஸ்-

சம்மாந்துறை பகுதியில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட 12 எருமை மாடுகளில் 7 மாடுகள் மருதமுனை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான குறித்த 12 எருமை மாடுகளும் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி காணாமல் போனதாக சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட எருமை மாடுகள் மருதமுனை பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார், 7 எருமை மாடுகளை மீட்டதுடன், 42 வயதுடைய மருதமுனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் மீட்கப்பட்ட எருமை மாடுகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களையும் இன்று (05) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையின் பேரிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.பி.எல். லக்சான் சமீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214772

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time