பார ஊர்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதல்: இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி.!!!
யாழ்ப்பாணம், கைதடிப் பகுதியில் இன்று (13) இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் பார ஊர்தி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


