காத்தான்குடி பிரதேச அபிவிருத்திப் பணிகளை: பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்.!!!
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் சிபாரிசின் பேரில், IROAD வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்று வரும் அல் அக்ஸா பள்ளிவாயல் வீதி மற்றும் பதுரியா பிரதேசத்தில் நடைபெறும் வடிகாண் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் நேற்று (27) காலை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்.
குறித்த வேலைத்திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் மற்றும் மேலதிகாரிகளுடன் செய்த கலந்துரையாடலின் போது, பெப்ரவரி மாதத்திற்கு முன் அனைத்து வேலைகளும் முடிவடையும் என உறுதி மொழி வழங்கப்பட்டு, திட்டத்தின் மிகுதி நிதி தொடர்பான விவரங்களும் ஆராயப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரின் நேரடி பார்வை மற்றும் மேலாண்மை கண்காணிப்பு மூலம், காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகள் தரமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.








