உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

தேசியப் பட்டியல் எம்.பி. ஹபீப் ரிபானை வரவேற்று வாழைச்சேனையில் கூடிய முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்.!!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹபீப் ரிபானை வரவேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று (02) வாழைச்சேனை ஹைராத் ஜும்ஆ பள்ளிவாசல் அருகாமையில் நடைபெற்றது.

கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.எச்.எஸ். இஸ்மாயில் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டமுதுமாணி அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர், தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம். முஷாரப், கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். அப்துல் வாசித், ஏறாவூர் நகரசபைத் தலைவர் எம்.எஸ். நளீம், காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சீ. சமால்தீன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம். பைறூஸ், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான ஹாமித் சிறாஜி, கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

புதிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஹபீப் ரிபான் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெருமளவில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214787

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time