உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு.!!!

தமிழ் – சிங்கள புத்தாண்டிற்காக, ஏப்ரல் 9 முதல் 21 வரை தொடருந்து திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து கூட்டுப் போக்குவரத்துத் விசேட திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது.

இந்த காலகட்டத்தில், 24 மணி நேரமும் பயணிகள் விபரங்களை அறிந்துகொள்ள 1955 என்ற தொலைப்பேசி எண் மற்றும் 071 2595555 என்ற வட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேருந்துகள் தொடர்பில் தகவல்களைப் பெற, 1958 என்ற எண்ணையும், தொடருந்து விசாரணைகளுக்கு 1971 என்ற எண்ணையும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்களுக்காக, சிறப்பு பயணிகள் போக்குவரத்து சேவைகளும் தொடருந்து சேவைகளும் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கமைய பதுளை, பெலியத்த, அனுராதபுரம், காலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களுக்கு 40 தொடருந்து சேவைகள் இயக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மத்திய போக்குவரத்து நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பிரதான போக்குவரத்து நிலையம், அதிவேக நெடுஞ்சாலையில் மாகும்புர, கடவத்தையில் உள்ள பிரதான போக்குவரத்து நிலையங்களில் இருந்தும் சிறப்பு போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 721075

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time