உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

நெதர்லாந்து தூதுவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்.!!!

இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் வைபே டி போயர் (H.E. Wiebe de Boer) தலைமையிலான பிரதிநிதிகள் குழு, செவ்வாய்க்கிழமை (02) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜை சந்தித்த தூதுவர் உள்ளிட்ட பிரதிநிதிகள், மாவட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இலங்கை–நெதர்லாந்து இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல், மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஆதரவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நட்புறவு ரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவமான வரலாற்று மற்றும் சமூக அம்சங்கள் தொடர்பிலும் தூதுவர் கேட்டறிந்தார். குறிப்பாக, டச்சுக் காலத்து வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் பறங்கி சமூகத்தினர் தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நெதர்லாந்து தூதுவர் தெரிவித்தார்.

சந்திப்பின் நினைவாக இருதரப்பினராலும் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர். சிவநேசன், அனர்த்த முகாமைத்துவப் பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், மாவட்ட தகவல் அதிகாரி வி. ஜீவானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215578

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time