கிழக்கு மாகாண பொதுச் சேவையில் 36 பேருக்கு புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள்.!!!
கிழக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை மனித வளத்தை வலுப்படுத்தும் நோக்கில், புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நேற்று (31) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, சிறப்புத் தரத்திற்கான பதவி உயர்வுகள் 10 பேருக்கும், தொழில்நுட்ப அதிகாரிகளுக்கான புதிய நியமனங்கள் 20 பேருக்கும், வரைவாளர்களுக்கான புதிய நியமனங்கள் 6 பேருக்கும் வழங்கப்பட்டன.
மேலும், முன்னதாக நியமிக்கப்பட்ட 53 தொழில்நுட்ப அதிகாரிகள் தமது பதவிகளில் இணைந்துள்ளனர். இவர்களில் 44 பேர் பொது அடிப்படையிலும், 9 பேர் வரையறுக்கப்பட்ட அடிப்படையிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், முன்னதாக நியமிக்கப்பட்ட 7 வரைவாளர்களும் தமது பதவிகளில் இணைந்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும், நிறுவனங்களின் செயற்றிறனை வலுப்படுத்துவதற்கும், மக்களுக்கு மேலும் திறமையான பொதுச் சேவையை வழங்குவதற்கும் இந்த நியமனங்களும் பதவி உயர்வுகளும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.
புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தங்களது கடமைகளை தொழில்முறைத் திறன், நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றி, கிழக்கு மாகாண மக்களுக்கு தங்களது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர வலியுறுத்தினார்.




