புதிய அரசியலமைப்பும் சிறுபான்மையினரின் உரிமைகளும்: காத்தான்குடியில் நிபுணத்துவக் கலந்துரையாடல்.!!!
-எம்.ஐ.அப்துல் நஸார்-
தொழில் வாண்மைமையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் (FCIP) ஏற்பாட்டில் ‘புதிய அரசியலமைப்பும் சிறுபான்மை நலன்களும்’ என்ற தலைப்பிலான விசேட நிபுணத்துவ கலந்தரையாடல் கூட்டம் காத்தான்குடியில் நடைபெற்றது.
தொழில் வாண்மைமையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் தவிசாளரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஓய்வுநிலை ஆசிரியர் யூ.எல்.எம்.என். முபீன் தலைமையில் கடந்த புதன்கிழமை (14) புதிய காத்தான்குடி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள MRF வில்லாவில் மேற்படி விசேட நிபுணத்துவ கலந்தரையாடல் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரதான வளவாளராக பிரபல சிரேஷ்ட சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந் நிகழ்ச்சியில் தொழில் வாண்மைமையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் நிருவாகிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் புதிய அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தங்கள், சட்டச் சூழல் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து இக்கலந்தரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் எதிர்காலப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















