உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

பொதுமக்களுக்கு விரைவான சேவை வழங்க புதிய Token முறை; மட்டக்களப்பு மாநகர சபை நடவடிக்கை.!!!

மட்டக்களப்பு மாநகர சபைக்கு பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் பொதுமக்களுக்கு துரிதமானதும், வினைத்திறனானதுமான சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கும் நோக்கில் புதிய Token (வரிசைச் சீட்டு) முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் நாகராஜா தனஞ்ஜெயன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆளுமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கையை, மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர், பிரதம கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகளுடன், சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

புதிய Token முறையின் மூலம், பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படுவதுடன், ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் குறைந்த நேரத்தில் தங்களுக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநகர சபைக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தரும் அனைவரும் முகப்பு அலுவலகத்தில் Token (வரிசைச் சீட்டு) பெற்றுக்கொண்ட பின்னரே தங்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என மாநகர சபை தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு சிறந்த, இலகுவான மற்றும் நவீன நிர்வாக சேவைகளை வழங்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த புதிய Token முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215571

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time