உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் அநுராதபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை, கடமையில் இருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மீது சுமத்தப்பட்டது.

அந்நிலையில் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் அர்ச்சுனா இராமநாதன் முன்னிலையாகிய வேளை , சந்தேகநபரான சுலோச்சனா இராமநாதன் என பெயர் குறிப்பிட்டு இருந்தமையால் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டு இருந்தார்.
குறித்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு அநுராதபுர நீதிமன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டு இருந்தது.

இந்நிலையில், அநுராதபுர பொலிஸ் நிலையத்தின் விசேட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்ப்பாணத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து , அநுராதபுரம் அழைத்து சென்றுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722362

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time