உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்திக்கு: உத்தியோகபூர்வ அனுமதி.!!!

● ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது.

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதற்கான தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள், இன்று (31) காத்தான்குடி நகர சபைத் தவிசாளரின் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் பரிசீலிக்கப்பட்டன.

இதன்போது, குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக மேலதிகமாக தேவையான விடயங்களை தாமதமின்றி ஆவணப்படுத்தி சமர்ப்பிக்குமாறு, அவர் காத்தான்குடி நகர சபைத் தவிசாளரிடம் அறிவுறுத்தினார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் முன்வைக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம், நீண்டகாலமாக பிரதேச அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில், நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், குறித்த பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700873

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time