வயோதிபர் அடித்துக்கொலை; பொலிசார் தீவிர விசாரணை.!!!
வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு (8) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளத்துச்சேனை – பேரில்லாவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில், 63 வயதுடைய வயோதிபர் ஒருவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
கொலையாளியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், கொலைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.