உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!
file_0000000026b48208b383dd96198274ab
“மாற்றம்” என்ற மக்கள் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்; சாதனைகள், சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?!!!

Share :

கொழும்பு–கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் தொடரும் திருட்டு; 3 ஆண்டுகளில் 100 சம்பவங்கள்.!!!

கொழும்பு–கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் கேபிள்கள், செப்பு கம்பிகள், வீதி மின்விளக்குக் கம்பங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்ட 100 சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவாகியுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் இவ்வாறு 100 திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், 11 திருட்டுச் சம்பவங்களினால் ஏற்பட்ட இழப்பு சுமார் 580 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய 89 திருட்டுச் சம்பவங்களினால் ஏற்பட்ட இழப்பின் பெறுமதி இதுவரை கண்டறியப்படவில்லை என கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையின் மின்சார மற்றும் உட்கட்டமைப்பு உபகரணங்கள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பான இழப்புகளை முழுமையாக மதிப்பீடு செய்வதன் அவசியத்தையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1187682

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time