உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

இணைய மோசடி சந்தேகம்: 32 சீனப் பிரஜைகளிடம் விசாரணை; 23 கணினிகள் அதிரடியாகப் பறிமுதல்.!!!

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லுருவ பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 23 கணினிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த விடுதியில் இணையத்தளத்தின் ஊடாக சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நிதி மோசடிகள் இடம்பெறுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த தகவலையடுத்து, பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தின் சோதனை உத்தரவைப் பெற்று பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, குறித்த விடுதியில் தங்கியிருந்த 32 சீனப் பிரஜைகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தச் சுற்றிவளைப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF), குற்றப் பதிவுப் பிரிவு, பொலிஸ் மோப்ப நாய்ப் பிரிவு மற்றும் அரச கரும மொழிகள் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்து செயற்பட்டுள்ளனர்.

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட 23 கணினிகள் உள்ளிட்ட உபகரணங்கள் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1372743

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time