உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ள திட்டம்.!!!

அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் அரச மருந்தகங்களை விரைவாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில், ”‘உங்கள் நகரத்திற்கான மருந்தகம்” திட்டத்தின் கீழ், இவ்வாறு அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் அரச மருந்தகங்களை விரைவாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், “உங்கள் நகரத்தில் ஒரு மருந்தகம்” திட்டம் அவசரத் திட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் மருந்தகங்கள் இல்லாத மாவட்டங்கள் உட்பட பிற மாகாணங்களில் அரச மருந்தகங்களை நிறுவுவதற்கான அவசரத் திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து தசாப்தங்களாக, நாடு முழுவதும் 64 அரச மருந்தகங்களை நிறுவுவதற்கு அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் இந்த அரச மருந்தகங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு பயனுள்ள, தரமான மற்றும் தொடர்ச்சியான சேவையை வழங்கும்.” என அமைச்சர் கூறியுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 722315

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time