உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 26, 2026

Hot News

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

கடல் மார்க்கமாக இந்தியாவுக்குக் கடத்த முயன்ற 4.4 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மீட்பு; 4 சந்தேகநபர்கள் கைது – கடற்படை அதிரடி.!!!

இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தென்னிந்தியாவுக்குக் கடத்த முயற்சித்த 4 கிலோகிராமிற்கும் அதிகமான தங்கத்துடன் நான்கு சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தலைமன்னார் பேசாலை மற்றும் புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் நேற்று (17) முன்னெடுக்கப்பட்ட இரண்டு விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போதே இந்தத் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமத்திய கடற்படைக் கட்டளைக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, தலைமன்னார் வடக்குக் கடற்பரப்பில் பேசாலைப் பகுதிக்கு அப்பால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டது.

இதன்போது, மணல் நிரப்பப்பட்ட சாக்குப் பையொன்றுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 410 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. அத்துடன், 25 மற்றும் 28 வயதுடைய பேசாலைப் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட தங்கம், சந்தேகநபர்கள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பிரதி சுங்கப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வடமேற்கு கடற்படைக் கட்டளைக்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டது.

இதன்போது, படகிலிருந்த எரிபொருள் கொள்கலனுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோகிராம் 25 கிராம் தங்கம் மீட்கப்பட்டது. அத்துடன், 40 மற்றும் 50 வயதுடைய கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட தங்கம், சந்தேகநபர்கள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மொத்த தங்கத்தின் எடை 4 கிலோகிராம் 435 கிராம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட தங்கத்தை சட்டவிரோத கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் கடல் மார்க்கமாக தென்னிந்தியாவுக்குக் கொண்டு செல்ல முயற்சித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இலங்கைக் கடற்பரப்பினூடாக முன்னெடுக்கப்படும் தங்கக் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக விசேட கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1361574

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time