உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

மட்டக்களப்பில் கண் பார்வையற்ற மற்றும் ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் பங்கேற்பு.!!!

(ஜே.கே)

இன்று ஆரம்பமாகியுள்ள கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கண் பார்வையற்ற மாணவன் ஒருவரும் ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவருமாக இரு விசேட தேவை உள்ளவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்

விழிப்புலனற்ற மாணவன் மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் இருந்து சிவானந்தா தேசிய பாடசாலை பரீட்சை மண்டபத்தில் செய்கை மொழியில் பரீட்சை எழுதுவதற்காக பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்

அதேநேரம் ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் மட்டக்களப்பு மஞ்சஞ்தொடுவாயிலுள்ள தனது வீட்டிலிருந்து சிசிலியா பெண்கள் கல்லூரி பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதுவதற்காக பரீட்சைக்கு தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன. மாணவர்கள் மிகவும் உற்சாகத்தோடு பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். பரீட்சை மண்டபங்களுக்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810863

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time