உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

கடவுச்சீட்டு வழங்கும் 24 மணி நேர சேவை; நாளையுடன் நிறைவு.!!!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக 24 மணி நேரமும் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளையுடன் (30) நிறைவடையவுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டு விநியோகிக்கும் ஒருநாள் சேவை 24 மணி நேரமும் முன்னெடுக்கும் செயற்பாடு கடந்த 2025.02.18ஆம் திகதி முதல் இடம்பெற்றிருந்த நிலையில், நாளையுடன் (30) நிறைவுக்கு வரவுள்ளது.

அதற்கமைய, 2025 ஜூன் 2 திங்கட்கிழமை முதல் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அன்றைய தினம் ஒருநாள் சேவையின் கீழ் முன்கூட்டியே திகதியை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களும், அவசர அல்லது முன்னுரிமை தேவைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களும் மேற்கண்ட காலகட்டத்தில் ஒருநாள் சேவையின் கீழ் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தலைமை அலுவலகத்தில் சாதாரண சேவைகளின் கீழ் விண்ணப்பங்களும் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

பிராந்திய அலுவலகங்களில் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாதாரண மற்றும் ஒருநாள் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 720069

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time