பெண்ணொருவர் சடலமாக மீட்பு; சந்தேகத்தில் மகன் கைது.!!!
(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக இன்று (06) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது தாயுடன் வாழ்ந்து வந்த 46 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாக்கி குறித்த தாய் மரணமடைந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் மகனை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

