உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

அஸ்வெசும பயனாளிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கான ஆளுமை விருத்திப் பயிற்சி முன்னெடுப்பு.!!!

-பாறுக் ஷிஹான்-

சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளி மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் பொருட்டு ஆளுமை விருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்   பயிற்சி வேலைத்திட்டம் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இதன் போது  சமுர்த்தி திட்ட முகாமையாளர் எஸ்.எல். அஸீஸ்  இணைப்பில் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதியாக பிரதேச செயலக கணக்காளர் அமிர் அலி கலந்து கொண்டார்.

தொழில் முயற்சியாளர்களுக்கு  தேவையான தொழில்   சந்தை  மற்றும்  நிதி மேலாண்மை   போன்றவை  இப்பயிற்றி வேலைத்திட்டத்தில் விளக்க  விரிவுரை வழங்கப்பட்டதுடன்   பேசும் பயிற்சிகள் , கேள்வி பதில் ஊடாக நேரடி வழிகாட்டல் போன்றவற்றையும் மேற்கொள்ளப்பட்டு பங்கேற்பாளர்களின்   நம்பிக்கையும் திறனும் அதிகரிக்க வளவாளர்களால் விரிவுரைகள் நடத்தப்பட்டது .

மேலும் தேசிய முயற்சியாண்மை அபிவிருத்தி அதிகார சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.எம். நபீல், சிறு கைத்தொழில் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எல். அப்துல் ஜலீல் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன்  சமுர்த்தி வங்கி சங்க முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எம்.அம்சார்,  திட்ட உதவியாளர் ஏ.எஸ்.எம். ஜஃபர், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ். சனுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066868

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time